ஊ.மங்கலம் விபத்தில் 14 பேருக்கு காயம்

ஊ.மங்கலம் விபத்தில் 14 பேருக்கு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update: 2025-06-01 15:09 GMT
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஊ. மங்கலம் அருகே பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 14 பேர் காயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News