ஒசூரில் 140 கிலோ குட்கா, மற்றும் கார் பறிமுதல்

ஒசூரில் 140 கிலோ குட்கா, மற்றும் கார் பறிமுதல்;

Update: 2025-07-09 02:44 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் சிப்காட் போலீசார் மூக்கண்டப்பள்ளியில் உள்ள பிரபல தனியார் உணவகம் முன் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரின் டிரைவர் போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். போலீசார் காரை சோதனையிட்ட சபோது அதில் 140 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், கா்நாடக மாநில மதுப்புட்டிகள் 48 இருப்பது தெரிவந்தது. இதையடுத்து அந்த புகையிலை பொருள்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் சேலத்திற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

Similar News