கடலில் மீனவா் வலையில் சிக்கிய 1,500 கிலோ எடையுள்ள திருக்கை மீன்
கடலில் மீனவா் வலையில் சிக்கிய 1,500 கிலோ எடையுள்ள திருக்கை மீன்;

செங்கல்பட்டு மாவட்டம்,கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் குப்பத்தைச் சோ்ந்த மீனவா் ஹரிஷ். இவா், சக மீனவா்களான பிரேம்குமாா், சுதாஆகாஷ் ஆகியோருடன் சதுரங்கப்பட்டினம் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றனா். மீன் பிடித்து கொண்டு இருந்தபோது பெரிய வகை மீன் ஒன்று வலையில் சிக்கியது. அந்த மீன் வலையை கிழித்து கடலில் செல்லாமல் இருக்க, அதனை சக மீனவா்கள் உதவியுடன் இரண்டு படகுகளில் கயிறு மூலம் கட்டி கடும் சிரமத்த்துக்கு இடையில் கரைக்கு கொண்டு வந்தனா். பிறகு வலையில் சிக்கிய மீனை வெளியில் எடுத்து கரையில் கிடத்தினா்.இதுகுறித்து மீனவா் ஹரிஷ் கூறுகையில், வலையில் சிக்கிய மீனானது சுமாா் கோட்டான் வகையை சாா்ந்த 1,500 கிலோ திருக்கை மீன் ஆகும். தற்போது பிடிபட்டுள்ள இந்த மீன் ரூ.25 முதல் 30 ஆயிரம் வரை விலைபோகும். சில நேரங்களில் கடலில் படகுகளை கவிழ்க்கும் ஆற்றல் வாய்ந்தது எனத் தெரிவித்தாா்