ஓசூர்: காரில் கடத்த முயன்ற 157 குட்கா பறிமுதல்.

ஓசூர்: காரில் கடத்த முயன்ற 157 குட்கா பறிமுதல்.;

Update: 2025-07-12 02:11 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் சிப்காட் பேஸ்-1 பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரூரிலிருந்து வந்த காரை போலீசார் நிறுத்திய போது ஓட்டுநர் அதில் வந்தவர் காரை நிறுத்தி விட்டு அகிந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் காரில் சோதனையிட்டபோது அதில் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 157 கிலோ குட்கா, 30 கர்நாடக மது பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியல் அப்போது தப்பி ஓடியவர்கள் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த டிரைவர் சாகுல் அமீது (38) சாதிக்பாய் ஆகியோர் என்பதும் புதுக்கோட்டைக்கு குட்கா மற்றும் மது பாக்கெட்டுகள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதை அடுத்து கார், குட்கா, மற்றும் மது பாக்கெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News