வெள்ளியணை- சட்டவிரோத மது விற்பனை.ரூ16,000 மதிப்புள்ள பிராந்தி மற்றும் பீர் பாட்டில்கள் பறிமுதல்.

வெள்ளியணை- சட்டவிரோத மது விற்பனை.ரூ16,000 மதிப்புள்ள பிராந்தி மற்றும் பீர் பாட்டில்கள் பறிமுதல்.

Update: 2024-10-03 08:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வெள்ளியணை- சட்டவிரோத மது விற்பனை.ரூ16,000 மதிப்புள்ள பிராந்தி மற்றும் பீர் பாட்டில்கள் பறிமுதல். அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழக முழுவதும் மது விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இது தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகமும், கரூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்பனை செய்யக்கூடாது என அறிவிப்பு செய்தது. மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மற்றும் மதுபான கூட்டங்களில் விற்பனை நடைபெறாமல் இருந்தது. ஆனால், சட்ட விரோதமாக ஒரு சிலர் ஆங்காங்கே மது விற்பனையில் ஈடுபட்டனர். இதே போல கரூர் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பெண் காவல் உதவி ஆய்வாளர் சசிகலா ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பாகனத்தம் டாஸ்மாக் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் வயது 48 என்பவரையும், இதே போல வெங்கடாபுரம் பகுதியில் உள்ள பாலக்கட்டை அருகே மது விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் வயது 52 என்பவரையும் கைது செய்தனர். இருவரும் விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் சுமார் 16 ஆயிரம் மதிப்புள்ள 42 குவாட்டர் பாட்டில்களும், 56 பீர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த வெள்ளியனை காவல்துறையினர் பின்னர் அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Similar News