யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 177 ஆவது வார ஊர் பெயருக்கு ஏற்ற மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை அழகர் கோயில் சாலை மருதங்குளம் இடத்தில் நடைபெற்றது

Update: 2024-08-25 08:53 GMT
ஊர் பெயருக்கு ஏற்ற மரக்கன்றுகள் நடும் விழா யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 177 ஆவது வார ஊர் பெயருக்கு ஏற்ற மரக்கன்றுகள் நடும் விழா மதுரை அழகர் கோயில் சாலை மருதங்குளம் இடத்தில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆலோசகர் ராகேஷ் முன்னிலை வகித்தார். ஆலோசகர் பிரபு வரவேற்றார். உறுப்பினர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக இளம் மக்கள் இயக்கம் மற்றும் பார்வை பவுண்டேஷன் நிறுவனர் சோழன் குபேந்திரன் கலந்து கொண்டார். ‌ சோழன் குபேந்திரன் அவர்கள் மதுரை பெயர் காரணம், கடம்பவனம், மருத மரங்கள், மரங்களின் பயன்கள், மரங்களை நடுதல், சுற்றுச்சூழல், தட்பவெப்பம், நிலச்சரிவு ஆகியன குறித்து சிறப்புரை நிகழ்த்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக சோழன் குபேந்திரன் அவர்களுக்கு 'இளைஞர்களின் முன்மாதிரி விருது' வழங்கப்பட்டது. நிகழ்விற்கு தேவையான நீர் மருதம் மரங்கள் மற்றும் வலைகளை ஆலோசகர் சிலம்பம் மாஸ்டர் பாண்டி வழங்கினார். விழாவில் கார்த்திகேயன், அசோக்குமார், அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில், முத்துக்குமார், சார்லஸ் பரமேஸ்வரன், ஸ்டெல்லா மேரி, ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரங்கள் நடப்பட்டது. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். மாணவன் கலைவாணன் நன்றி கூறினார்.

Similar News