மோகனூர் வலையப்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் நகை 7 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை மோகனூர் போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வளையப்பட்டி சாலையில் கிருஷ்ண குமார் வயது 65 இவர் வளையப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் மளிகை கடை மற்றும் டீ கடை நடத்தி வருகிறார்.;

Update: 2025-11-27 12:01 GMT

 கிருஷ்ணகுமார் தனது குடும்பத்துடன் நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு இன்று காலை வீடு வீட்டுக்கு வந்துள்ளார் அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த கிருஷ்ணகுமார் அதிர்ச்சி அடைந்துள்ளார் பின்பு வீட்டில் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 18 சவரன் நகை மற்றும் 7 லட்சம் ரூபாய் ரொக்க பணம் பீரோவில் இந்த துணிகள் எல்லாம் கலைக்கப்பட்டு கீழே சிதறி கிடந்ததை பார்த்து கிருஷ்ணகுமார் அதிர்ச்சி அடைந்தார் இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட கிருஷ்ணன் குமாரின் வீட்டை ஆய்வு விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர் வளையப்பட்டி பகுதியில் 18 பவுன் நகை 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Similar News