கோமல் ஊராட்சியில் 2 ஏக்கர் நிலத்தில் மியாவாக்கி முறையில் குருங்காடு
மயிலாடுதுறை அருகே கோமல் ஊராட்சியில் 2ஏக்கர் நிலத்தில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் துவக்கி விழாவில் பூம்புகார் எம்எல்ஏ கலந்துகொண்டு கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம்; கோமல் ஊராட்சிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை எம்எல்ஏ நிவேதா முருகன் தொடக்கி வைத்தார்:- சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதைப் பின்பற்றி மயிலாடுதுறை மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோமல் ஊராட்சியில் கள்ளிக்காடு என்ற கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2024-2025-ஆம் ஆண்டுக்கான மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5,20,000 மதிப்பீட்டில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மியாவாக்கி முறையில் குறுங்காடு வளர்க்கும் திட்டத்தை திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா எம்.முருகன் மரக்கன்றுகளை நட்டு தொடக்கி வைத்தார். இதில் மகாகனி, வாழை, தென்னங்கன்று, கொய்யா, மாங்கன்றுகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் கிராமமக்கள் பலர் ஒன்றிணைந்து வறண்ட நிலமாக காணப்பட்ட இடத்தை ஒரு சில நிமிடங்களில் பசுமை நிறைந்த மரக்கன்றுகள் அடர்ந்த வனமாக மாற்றிய நிகழ்வு காட்சி கழுகு பார்வையில் பதிவாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.