திருமயம்: அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற 2 பேர் கைது!
குற்றச் செய்திகள்
திருமயம் தாலுகாவில் அரசு அனுமதியின்றி கல் குவாரிகள் செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருமயம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார். நேற்று மாலை மதுரை சாலையில் மாவூர் என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை யிட்டபோது, அனுமதியின்றி சரளை, ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை, பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் முருகேசன்(49), அழகு(44) ஆகியோரை கைது செய்தனர்.