சேலத்தில் டீக்கடை ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-04-16 10:47 GMT
சேலம் அம்மாபேட்டை நல்லுசாமி தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 65). டீக்கடை ஊழியர். சம்பவத்தன்று அவர் லைன்மேட்டில் உள்ள கடையில் பணியில் இருந்தார். அப்போது, கடைக்கு வந்த 2 பேர் பொருட்கள் வாங்கி கொண்டு பணம் கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் கனகராஜ் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கனகராஜை சரமாரியாக தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கருவாட்டு மண்டி பகுதியை சேர்ந்த அஜித் குமார் (29), ஸ்ரீ இளைய கங்கை (32) ஆகிய 2 பேரும் கனகராஜை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News