சேலம் அருகே குடிநீர் தொட்டிக்குள் விழுந்து 2 வயது குழந்தை பலி

போலீசார் விசாரணை;

Update: 2025-05-25 04:28 GMT
சேலம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவா் வேல்முருகன். இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு 2 வயதில் சித்திக்‌ஷா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று மாலை 3 மணி அளவில் பூங்கொடி வீட்டில் இருந்தார். அப்போது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அவருடைய மகள் சித்திக்‌ஷா, அங்கு தரைமட்டத்தில் இருந்த 10 அடி ஆழ குடிநீர் தொட்டியில் திடீரென தவறி விழுந்தார். சிறுமியை யாரும் கவனிக்கவில்லை. நீண்டநேரமாக மகளை காணாதது கண்டு பூங்கொடி அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உறவினர்கள் உதவியுடன் குழந்தையை பூங்கொடி சுமார் ஒரு மணி நேரமாக தேடினார். மாலை 4 மணி அளவில் குடிநீர் தொட்டிக்குள் பார்த்த போது அங்கு குழந்தை தண்ணீரில் பிணமாக மிதந்தது. இதைக்கண்டு பூங்கொடி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News