சூலூரில் கள்ளச்சந்தை மதுபானம் விற்பனை: 2 பேர் கைது !

கோவை மாவட்டம், சூலூரில் அரசு அனுமதி இல்லாமல் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்ததாக 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-10-03 07:13 GMT
கோவை மாவட்டம், சூலூரில் அரசு அனுமதி இல்லாமல் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்ததாக 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் ரோந்து பணியில் இருந்தபோது, ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள லவ்லி ரெஸ்டாரண்டில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற்பனை நடைபெறுகிறது என்ற தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனை நடத்தியபோது, பாண்டியராஜன் (37), ராம்லால் யாதவ் (65) ஆகியோர் வெள்ளை மூட்டையில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து வோட்கா, எம்.சி. விஎஸ்ஒபி, மேன்ஸ் கிளப், ஓல்ட் செஃப் போன்ற பிராண்டுகளில் மொத்தம் 53 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Similar News