கோவையில் கஞ்சா விற்ற 2 பேர் போலீசாரால் கைது !

ரெயில்வே பாலம் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-10-05 07:55 GMT
கோவை மாவட்டம் பீளமேடு போலீசார் டைடல் பார்க் அருகே ரோந்து சென்றபோது, ரெயில்வே பாலம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் நிற்கும் போது சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், சவுரிபாளையத்தை சேர்ந்த முகிலன் (வயது 20) மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அருண்குமார் (25) எனத் தெரியவந்தது. பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா பொட்டலமாகப் போட வைத்திருந்த 30 பிளாஸ்டிக் கவர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டனர்.

Similar News