பார் ஊழியரிடம் பணம் பறித்த 2 பேர் கைது !

அரிவாளால் மிரட்டி பணம் பறித்த இருவர் போலீசாரால் சிக்கினர் — தப்பியபோது கைமுறிந்த ஒருவருக்கு சிகிச்சை.;

Update: 2025-10-07 10:48 GMT
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே டாஸ்மாக் பார் ஊழியரிடம் அரிவாளை காட்டி ரூ.2 ஆயிரம் பறித்த இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் அங்கு பார் காசாளராக பணியாற்றி வந்தார். இரவு 2 பேர் மிரட்டி பணம் கேட்ட போது மறுத்ததால், அரிவாளால் கதவை வெட்டி பணம் பறித்து தப்பினர். புகாரின் பேரில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேக நபர்கள் தப்ப முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரின் கை முறிந்தது. கைது செய்யப்பட்டோர் தேனி உசிலம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (38), இடிகரை முகேஷ் (22) ஆவர்.

Similar News