திருச்செங்கோடு எலச்சி பாளையத்தில் விவசாயக் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்களை கற்றுத் தர நடத்தும் 2 மாத முகாம் தொடக்க விழா
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் விவசாயக் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்களை கற்றுத் தரவும் விவசாயிகளிடமிருந்து பாரம்பரிய அனுபவங்களை பெற்றுக் கொள்ளவும் இரண்டு மாதம் நடக்கும் முகாம் தொடங்கப் பட்டது. பிளான்டிஸ் செயலி குறித்த விளக்கம்தரப்பட்டது;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எலச்சிபாளையம் பகுதியில் பி ஜி பி விவசாய கல்லூரி மாணவர்கள் இன்று விவசாயிகளோடு கலந்து அனுபவ பயிற்சி பெறவும் தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்றுத் தரவும் இரண்டு மாத முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முகாமை கல்லூரியின் முதல்வர் கோபால் மற்றும் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வித்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர். சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகளை அழைத்து வந்து அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை அளிக்கப்பட்டது. இரண்டு மாத காலம் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களைவேளாண் கல்லூரி மாணவர்கள் குழு பார்வையிட்டு அதில் உள்ள குறைபாடுகளையும் பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல் நோய் தாக்குதல் ஆகியவற்றை கண்டறிந்து அதற்கு என்ன தீர்வு என்பது குறித்து மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். மேலும் விவசாயிகளின் பாரம்பரிய விவசாய அனுபவங்களை கற்றுக் கொள்ளும் வகையில் இந்த முகாம் நடைபெற உள்ளது. மேலும் பிளான்டீஸ் என்ற செயலி தற்போது இணையத்தில் உள்ளது, இந்த செயலியின் மூலம் என்ன பயிரிடலாம் எப்போது பயிரிடலாம் வானிலை 4 நாட்களுக்கு எவ்வாறு இருக்கும் என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு அதன் படி தங்களது விவசாய திட்டங்களை அமைத்துக் கொள்ளலாம் என மாணவர்கள் விவசாயிகளுக்கு செயலி குறித்து எடுத்துக் கூறினர். மேலும் ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டால் அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்றினால் 500க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் அதற்கு செயலி வாயிலாக தீர்வு வழங்க உள்ளதாக தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் ஏற்படும் நோய் தாக்குதல் குறித்தும் கேள்வி கேட்டு விளக்கம் பெற்றனர். இந்த நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள் பூவரசன் ரகுநாதன் கோபாலகிருஷ்ணன் ஆரைக்கல் நிர்வாக இயக்குனர் தமிழ்செல்வன் குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மாணவர் குழு தலைவர் ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.