திருவண்ணாமலை மாட வீதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் திருப்பதிக்கு நிகரான சிமெண்ட் சாலை

திருவண்ணாமலை மாட வீதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் திருப்பதிக்கு நிகரான சிமெண்ட் சாலை அமைத்து தந்தவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்

Update: 2023-12-03 16:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் தி.மலையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பதிக்கு நிகரான சிமெண்ட் சாலை அமைத்துத் தந்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என கலைஞர் நூற்றாண்டு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் எ வ வேலு பேசினார்.

தி.மலை நகர திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு என் 7 முதல் 20 வரை உள்ள வார்டுகளை சேர்ந்த எளிய எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் சி.சண்முகம், மு.கருணாநிதி குட்டி அருணாச்சலம், ஜீவரேகா விஜயராஜ், ந சீனிவாசன் குட்டி புகழேந்தி இல குணசேகரன், அ.கண்ணன், கோல்ட் பிரபு, ஹக்கீம் சேட்டு. நகரமன்ற உறுப்பினர் மெட்ராஸ் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காலேஜ் கு. இரவி அனைவரையும் வரவேற்றார். இதில் பொதுப்பணி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ வ வேலு கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவியாக குக்கர் வழங்கி சிறப்புரையாற்றினார். கலைஞரையும் தி.மலை மாவட்டத்தையும் பிரித்து பார்க்கமுடியாது.

காரணம் தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு காலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவேண்டும் என்றால் வேலூருக்கு சென்று தான் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் தி.மலை மாவட்டத்தை வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிரித்து திருவண்ணாமலை மாவட்டமாக அறிவித்து வேங்கிக்கால் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டி தந்தது தலைவர் கலைஞர் தான்,

அது மட்டுமின்றி நமது மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தந்தது கலைஞர் ஆட்சியில் தான். அதேபோல் போக்குவரத்து பணிமனை மண்டலத்தை பிரித்ததும் கலைஞர் ஆட்சியில் தான் பல பட்டியலிட்டார். இதேபோல் கடந்தமுறை நான் சட்டமன்றத் தேர்தலின் போட்டியிட்டபோது அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்.அப்பொழுது அவரிடத்தில் நான் ஒரு கோரிக்கை ஒன்றை வைத்தேன் திருப்பதிக்கு செல்லும் போதெல்லாம் அங்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு சிறப்பாக உள்ளது. தி.மலை மாடவீதியில் தேரோடும் போது தார் சாலைகளில் தேர் சக்கரம் பதிந்து சில சமயங்களில் தேர் தாமதமாக சுற்றி வரும் நிலை ஏற்படுகிறது ஆகவே நாம் ஆட்சிக்கு வந்தால் திருவண்ணாமலை மாட விதியை சிமெண்ட் சாலையாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று நாம் ஆட்சிக்கு வந்தால் தி.மலை மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். தற்பொழுது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு தற்போது திருப்பதிக்கு நிகரான சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு அதில் இந்த ஆண்டு தேர் திருவிழாவும் நடைபெற்றது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர் தங்கு தடையின்றி சிமெண்ட் சாலையில் சிறப்பாக வந்ததை கண்டு ஆன்மீக பக்தர் மற்றும் பொது மக்கள் அனைவரும் மாவட்ட அமைச்சரான எனக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் திருவண்ணாமலை மாவட்டம் வளர்ச்சி அடைவதாகவும், நமது மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து தந்த தலைவர் கலைஞருக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மற்றும் நகர கழகம் முடிவு செய்து எப்படி விழா எடுக்கலாம் என யோசித்த பொழுது ,சுலைஞரின் நினைவு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றால் உணவின்றி நாம் யாரும் வாழ முடியாது .ஆகவே அந்த வகை உணவை தற்போதைய காலத்தில் தயாரிக்க கூடிய குக்கரை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு நகர கழகம் சார்பில் பெரும் முயற்சி எடுத்து தற்போது குக்கரை கொடுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர் என தெரிவித்தவர்,

தற்பொழுது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மகளிருக்கான ஆட்சி எனவும், இந்த ஆட்சியில் மகளிருக்கான அனைத்து திட்டங்களும் - ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருவதாகவும் ஆகவே அன்பு சகோதரிகள் என்றைக்கும் இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என உரையை நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை மற்றும் வெளிநாட்டு தமிழர் நலன் துறை அமைச்சர் - கே.எஸ் மஸ்தான், மாநில மருத்துவர் அணி தலைவர் டாக்டர் எ.அ.வே.கம்பன். நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கள், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர்

டி.வி.எம்.நேரு. சு.விஜி - (எ) விஜயராஜ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆறுமுகம், எஸ்.டி.ஆர் எஸ்.பாபு, மின்னல் கமல், மீரா ஜோதி சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் லக்கி - அரவிந்தன், நகர மன்ற உறுப்பினர்கள் பி.ஆர். நாகராஜ், அருணா ரவி. ஏ.எம்.பாஷா, ட்ராவல்ஸ் பிரகாஷ் ஜாகிர் உசேன், எஸ். மதிவாணன்,சிற்பி ஏழுமலை, முருகன் சபரி,குமார், விக்கி, பழனி மோகன், டி.எம். ஞானம்,

முன்னாள் நகர மன்ற உறுப்பினர் நாராயணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் - வட்ட செயலாளர்கள் கோல்டு மஞ்சு, சரவணகுமார் ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

Similar News