ஆண்டிப்பட்டி கோட்டை-வேகமாக சென்ற தனியார் சொகுசு பேருந்து லாரியின் பின்னால் மோதி விபத்து.20 பேர் காயம்.

ஆண்டிப்பட்டி கோட்டை-வேகமாக சென்ற தனியார் சொகுசு பேருந்து லாரியின் பின்னால் மோதி விபத்து.20 பேர் காயம்.;

Update: 2025-09-22 04:20 GMT
ஆண்டிப்பட்டி கோட்டை-வேகமாக சென்ற தனியார் சொகுசு பேருந்து லாரியின் பின்னால் மோதி விபத்து.20 பேர் காயம். திருநெல்வேலி மாவட்டம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாராஜா வயது 28. இவர் தனியார் சொகுசு பேருந்து ஓட்டுனர். ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 2: 50 மணியளவில் இவரது பேருந்து கரூர்- திண்டுக்கல் சாலையில் கரூர் மாவட்டம் ஆண்டிப்பட்டி கோட்டை அருகே சென்ற போது, பேருந்தை வேகமாக இயக்கியதால் இவருக்கு முன்னால் சென்ற ஒரு டாரஸ் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கேரளா, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் 18 பேர் பயணித்தனர். 18 பேருக்கும் லேசானது முதல் பலத்த காயங்கள் ஏற்பட்டு இவர்களை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த பேருந்தில் பயணித்த கரூர் மாவட்டம் சின்னதா தாராபுரம் நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து வயது 55 என்பவர் அளித்த புகாரின் பேரில் பேருந்தை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய மகாராஜா மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News