நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026, சிறப்பு முகாம் தொடர்பாக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 சிறப்பு முகாமில் பெறப்படும் மனுக்களின் நிலை குறித்து உடனுக்குடன் கண்டறிய அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.;
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து திரும்ப பெறுவதற்கு அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் மற்றும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, முகாமில் பெறப்படும் மனுக்களின் நிலை குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இக்கட்டுப்பாட்டு அறையில் சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவியர்கள், சம்பந்தப்பட்ட வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு பெறப்பட்ட மனுக்களை விபரங்களை சேகரித்து வருகின்றனர்.மேலும், நாமக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றதை பார்வையிட்டார்.முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மா.க.சரவணன் அவர்கள் 94-நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மோகனூர் வட்டம், அணியாபுரம் பகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 சிறப்பு முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, வாக்காளர் பதிவு அலுவலர்களான 92.இராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.முருகன், 93.சேந்தமங்கலம் (ப.கு.) சட்டமன்ற தொகுதி மற்றும் தனி துணை ஆட்சியர் (ச.பா.தி.) சு.சுந்தரராஜன், 94.நாமக்கல் சட்டமன்ற தொகுதி மற்றும் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் .வே.சாந்தி, 95.பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் .மு.கிருஷ்ணவேணி, 96.திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பி.எஸ்.லெனின், 97.குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 சிறப்பு முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.