கொலையான குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வேண்டும் ஆர்ப்பாட்டம்

முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-02-23 12:27 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த முட்டம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இரண்டு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Similar News