திருப்பத்தூரில் அரசு மருத்துவர் வீட்டில் வீட்டு வேலை செய்வது போல் நடித்து 25 பவுன் நகையை திருடிய கணவன் மனைவி கைது!..20 சவரன் தங்க நகை மீட்பு

திருப்பத்தூரில் அரசு மருத்துவர் வீட்டில் வீட்டு வேலை செய்வது போல் நடித்து 25 பவுன் நகையை திருடிய கணவன் மனைவி கைது!..20 சவரன் தங்க நகை மீட்பு;

Update: 2024-12-20 09:38 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு மருத்துவர் வீட்டில் வீட்டு வேலை செய்வது போல் நடித்து 25 பவுன் நகையை திருடிய கணவன் மனைவி கைது!..20 சவரன் தங்க நகை மீட்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அட்வகேட் ராமநாதன் நகர் பகுதியைச் சார்ந்த கலைச்செல்வன் இவருடைய மனைவி சங்கரி புதூர் நாடு மலைப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மனைவி மல்லிகா (22) என்பவர் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் கடந்த 9ம் தேதி மருத்துவர் சங்கரி வீட்டு பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்த போது அதில் 25 பவுன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கரி ‌ திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மேலும் தன்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த மல்லிகா மீது சந்தேகம் உள்ளது எனவும் தெரிவித்தார். இதன் காரணமாக மல்லிகா அவருடைய கணவர் ஆகிய இருவரையும் திருப்பத்தூர் நகர போலிசார் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் நகையை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதன் காரணமாக மருத்துவர் வீட்டில் திருடப்பட்ட 25 பவுன் நகைகளில் 20 சவரன் தங்க நகையை போலீசார் மீட்டனர். எனவே போலீசார் இருவரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்‌. மேலும் அரசு மருத்துவர் வீட்டில் வேலை செய்வதுபோல் நடித்து 20 பவுன் தங்க நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

Similar News