மாபெரும் கல்விக்கடன் முகாமில், 250 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.16.28 கோடி மதிப்பில் கடனுவிகளை வழங்கிய எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமில், 250 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.16.28 கோடி மதிப்பில் கடனுவிகளை வழங்கினார்.;
நாமக்கல் மாவட்டம், பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மாவட்ட ஆட்சியர் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமில், 250 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.16.28 கோடி மதிப்பில் கடனுவிகளை வழங்கினார்.இம்முகாமில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 2000 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.50.00 கோடி கல்விக்கடன் வழங்க இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கினை அடைவதற்கு நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து கல்விக்கடன் முகாம்களை கிராம ஊராட்சி அளவிலும், வட்டார அளவிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடத்தி வருகிறது. இராசிபுரம் மற்றும் பள்ளிபாளையம் வட்டாரங்களில் உள்ள அனைத்து இ-சேவை மைய பணியாளர்களுக்கும் வித்தியாலட்சுமி தளத்தில் எவ்வாறு கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பது என்று பயிற்சியளித்து, பின்னர் 30.08.2025 அன்று இராசிபுரம் வட்டாரத்திலும், 23.10.2025 அன்று பள்ளிபாளையம் வட்டாரத்திலும் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கல்விக்கடன் விண்ணப்பங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பெறப்பட்டு வித்தியாலட்சுமி தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் இராசிபுரம் வட்டாரத்தில் 71 மற்றும் பள்ளிபாளையம் வட்டாரத்தில் 121 கல்விக்கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 20.09.2025 அன்று எர்ணாபுரம் சி.எம்.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்விக்கடன் வழங்கும் விழாவில் 157 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.14.30 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறும் இக்கல்விக் கடன் முகாமில் 250 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.16.28 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. வங்கியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எய்திடும் வகையில் மாணவ, மாணவியர்களுக்கு கடனுதவிகளை வழங்கிட வேண்டும். மாணவ, மாணவியர்கள் வங்கிகளில் கடனுதவியினை பெற்று திரும்ப செலுத்தி, வாழ்வில் முன்னேற்றம் அடைவதோடு, நீங்கள் செலுத்தும் தொகை மற்ற மாணவருக்கு கடனுதவி வழங்க உதவியாக இருக்கும். வங்கி கடன் பெற்று கல்வி பயில்கிறோம் என்றால் அதனை திரும்ப செலுத்தக்கூடிய பொறுப்பு பெற்றோர்களை விட அந்த மாணவனுக்கு தான் அதிகமாக உள்ளது.நீங்கள் முறையாக அக்கடனை திரும்ப செலுத்தும் போது, எதிர்காலத்தில் உங்களது சந்ததிகள் மட்டும் அல்லாமல், மற்ற மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றக் கூடிய வாய்ப்பாக அமையும். வங்கிகளில் பெறும் கடனானது திரும்ப செலுத்துகிறோம் என்றால், நமது நாணயம் உயரும். சிபில் ஸ்கோர் என்பது உங்கள் கடன் தகுதியைக் குறிக்கும் எண்ணாகும். நீங்கள் பெறும் கடனை எவ்வளவு பொறுப்புடன் திருப்பிச் செலுத்துகிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. கடனளிப்பவர்கள் உங்களது கடன் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்ய இந்த ஸ்கோரைப் பயன்படுத்துகிறார்கள். வங்கி கடனை திரும்ப செலுத்துவது காலதாமதமானால், உங்களது சிபில் ஸ்கோர் என்பது பாதிக்கப்படும். கல்வியை நாம் தொடர்ந்து பயிலுவதற்கு வங்கி கடன் பெறவேண்டும் என்றால் அதனை முறையாக செலுத்த வேண்டும் என்ற கடமை நமக்கு உள்ளது.6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாகவும், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலமாகவும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியில், செவிலியர் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் விடுதி, புத்தகம், உணவு ஆகியவற்றின் கட்டணத்தினை அரசே செலுத்துகிறது.இவ்வாறு உயர்கல்வியில் முன்னேறி கொண்டிருக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. எனவே இன்றைய தினம் கடனுதவி பெறும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராஜ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சு.சுந்தர ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ம.மலர்விழி, மண்டல மேலாளர் (இந்தியன் வங்கி, திருப்பூர்) தாமோதரன் கோவிந்தராஜன் மற்றும் ஞானமணி கல்வி நிறுவன தலைவர் உட்பட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.