கரூர்-அழகம்மை மஹாலில் கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 26 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
கரூர்-அழகம்மை மஹாலில் கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 26 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
கரூர்-அழகம்மை மஹாலில் கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 26 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்த்தி ஹோட்டலில் உள்ள அழகம்மை மஹாலில், கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கமும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இணைந்து நடத்திய 25வது வெள்ளி விழா மற்றும் 26 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் இன் தலைமை நிர்வாக அலுவலர் விசுவநாதன் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் உதவி செயலாளர் டாக்டர் பாபா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கரூர் அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் நாராயணசாமி, ரசமா கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் கார்த்திகா, கரூர் பப்ளிக் ஸ்கூல் கரஸ்பாண்டட் அஜய் கிருஷ்ணா, சங்கத்தின் தலைவர் எஸ் ஆர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த 2019-20ம் ஆண்டு,2021-22 ஆம் ஆண்டு, 2022-23 ஆம் ஆண்டு, 2023 24 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.