முதல்வர் வீடியோ கால் ஆய்வு: 2,700 மனுக்களுக்கு தீர்வு – மாவட்ட ஆட்சியர் தகவல் !
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வர் முகாம்களை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ கால் மூலம் நேரடியாகக் கண்காணித்தார்.;
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வர் முகாம்களை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ கால் மூலம் நேற்று நேரடியாகக் கண்காணித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமாரிடம் வீடியோ அழைப்பின் போது, முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, வழங்கப்பட்ட வசதிகள் மற்றும் தீர்வு அளிக்கப்பட்ட மனுக்களின் விவரங்கள் குறித்து முதலமைச்சர் விசாரித்தார். இதுவரை 2,700க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். மீதமுள்ள மனுக்களும் விரைவில் பரிசீலிக்கப்பட்டு தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுக்கான மனுக்களும் சிறப்பு கவனத்துடன் சேகரிக்கப்படுவதாகவும், மருத்துவ முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் சிவகுரு பிரபாகரனும் உடனிருந்தனர்.