வருகிற 29.12.25 அன்று பாலுக்கு விலை உயர்வு கேட்டு கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காததை கண்டித்து விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் தனியார் ஹோட்டலில் சங்க தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-11-20 13:45 GMT

 இதில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர் இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் வேலுசாமி வருகிற 29.12.25 அன்று பாலுக்கு விலை உயர்வு கேட்டு கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த படும் எனவும் முதல்வர் மற்றும் பால் வளத்துறை அமைச்சருக்கு விலை உயர்வு கேட்டு கோரிக்கை மனு அளிக்கப்படும் மேலும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ 15 உயர்த்தி வழங்க வேண்டும் மேலும் ஆவின் பால் கூட்டுறவு சங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்

Similar News