விராலிமலை: விராலிமலை ஒன்றியம் மண்டையூர் அரசிக்காடு பகுதியை சேர்ந்தவர் மலையரசு (31). கடந்த மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க சங்கிலி, மண்டையூர் வடகாடு பகு தியை சேர்ந்த மூக்கன் (45) வீட்டில் 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் 2 லட்சம் ரொக்கம், மண்டையூர் நாட்ரியன்காடு பகுதியை சேர்ந்த சண்முகம் (45) வீட்டில் 34 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பட் டப்பகலில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதன் பேரில் மண்டையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மாத்துார்,ஆவூர், கீரனுார், மலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள நகை அடகு கடைகளில் யாராவது திருட்டு நகையை அடகு வைத்துள்ளனரா என்ற கோணத் தில் விசாரணை மேற்கொண்டனர். இதில் மண் டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்த சிவா (27) என்பவர் ஆவூர், மலம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து மண்டையூர் குளத்து பகுதியில் பதுங்கியிருந்த சிவாவை போலீ சார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசார ணையில், கொள்ளை சம்பவத்தில் மண்டையூரை சேர்ந்த நவீன் (23), அதே பகுதியை சேர்ந்த சூர்யா (21) ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருப்பதாக தெரி வித்தார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அடகு கடையில் வைக்கப்பட்ட நகைகளை மீட்டனர். கீரனுார் குற்றவியல் கோர்ட் டில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.