சேலம் தாதகாப்பட்டியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

போலீசார் நடவடிக்கை

Update: 2024-12-24 01:20 GMT
சேலம் அன்னதானப்பட்டி போலீசார் தாதகாப்பட்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அம்மாள் ஏரி ரோடு தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நெத்திமேடு கே.பி. கரடு பகுதியை சேர்ந்த விஜய் (வயது 26), தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த செல்வராஜ் (23), தாதகாப்பட்டி சண்முக நகரை சேர்ந்த பிரகாஷ் (25) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News