அரக்கோணம் தி.மு.க. நகரமன்ற உறுப்பினருக்கு வெட்டு-3பேர் சரண்!

தி.மு.க. நகரமன்ற உறுப்பினருக்கு வெட்டு-3பேர் சரண்!;

Update: 2025-05-22 06:22 GMT
அரக்கோணம் நகராட்சி 6-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பாபு (வயது 36). பழைய பஸ் நிலையம் அருகில் விடுதி மற்றும் பைனான்ஸ் நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு 9 மணிக்கு அவருடைய அலுவலகத்திற்கு வந்த சிலர் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மர்ம கும்பல், பாபு, அவருடைய தந்தை மணி, பாபுவின் உறவினர்களான சுரேஷ், ஜெகன் ஆகிய 4 பேரை தாக்கி, கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடிவந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் அரக்கோணம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25), முகேஷ் (25), நாகராஜ் (24) ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நேன்று சரண் அடைந்தனர். அவர்கள் அரக்கோணம் டவுன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Similar News