கோவையில் குழந்தை திருமணம்: 3 பேர் மீது நடவடிக்கை கோரி புகார் !
குழந்தை திருமண விவகாரத்தில் மாப்பிள்ளை கைது செய்யப்பட்ட நிலையில் கல்யாணத்திற்கு உதவியாக இருந்த மூன்று பேரை கைது செய்ய புகார்.;
கோவை வெள்ளிமலை பட்டினத்தில் 14 வயதான சிறுமி மதுமித்ரா மற்றும் 29 வயதான ராமகிருஷ்ணன் இடையே குழந்தை திருமணம் நடைபெற்றது தொடர்பாக பரபரப்பு நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து, டாக்டர் அப்துல் கலாம் மகளிர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது. திருமணத்தை ஏற்பாடு செய்ததாக பிரகாஷ், சிவரஞ்சனி மற்றும் சங்கீதா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. தற்போது மூவரும் தலைமறைவாக உள்ள நிலையில், வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினரிடம் லஞ்சம் கொடுத்து தப்பியதாகவும், பொதுமக்களை மிரட்டுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமி பீளமேடு குழந்தைகள் நல காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். ராமகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என மகளிர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.