மகாராஜகடை:அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 3 பேர் மீது வழக்கு பதிவு.
மகாராஜகடை: அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 3 பேர் மீது வழக்கு பதிவு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகேயுள்ள ஏரியூர் மாரியம்மன் கோயில் பகுதியில் கடந்த 30-ஆம் தேதி அன்று அனுமதி இன்றி எருது விடும் விழா நடைபெற்றது. இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர் மகாராஜகடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் எருது விடும் விழா நடத்திய கோகுல் (25) உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.