திட்டச்சேரியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 3 எருமை மாடுகள் திருட்டு

மாடுகளை கடத்தி விற்கும் குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை வீச்சு;

Update: 2025-07-04 05:54 GMT
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட வாணிய தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் நரசிம்மன் (54). இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார், இந்நிலையில், நரசிம்மன் தன் எருமை மாடுகளை, வழக்கம்போல் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டு உள்ளார், ஆனால் மாலை மாடுகள் வீட்டுக்கு திரும்ப வரவில்லை. இதனால், நரசிம்மன் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். மாடுகள் கிடைக்க வில்லை. யாரோ மர்மநபர்கள் மாடுகளை லோடு ஆட்டோவில் ஏற்றி வெளியூருக்கு ஏற்றி சென்று விட்டதாக தகவல் வந்தது. அதையடுத்து, நரசிம்மன் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். பட்டுக்கோட்டை அருகே உள்ள நெய்வேலி என்ற இடத்தில் இருந்து மாடுகள் அதிக அளவில் கேரளா சந்தைக்கு அனுப்பபடுவதாக அறிந்து, அங்கு சென்று தேடி பார்த்து உள்ளார். அப்போது, அவருடைய 3 எருமை மாடுகளும் அங்கு இருப்பதை அறிந்து 3 எருமை மாடுகளையும் அங்கிருந்து லோடு ஆட்டோ மூலம் திட்டச்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார். மேலும், இது குறித்து திட்டச்சேரி காவல் நிலையத்தில் நரசிம்மன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீஸார் மாடுகளை கடத்தி சென்று விற்கும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த மூன்று எருமை மாடுகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

Similar News