கோவை ரூ.30 லட்சம் கொள்ளை — 3 பேர் கைது, 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
நகை பட்டறை வாலிபரை கடத்தி 30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
திருச்சூர் சேர்ந்த ஜீவன் என்பவர் கோவை நகை பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். அவர் கடந்த 12-ம் தேதி ரூ.30 லட்சம் பணத்துடன் கேரளா செல்லும் போது, சில பேர் அவரை காரில் கடத்திச் சென்று தாக்கி பணத்தை கொள்ளையடித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, கேரளா எர்ணாகுளம் சேர்ந்த 3 பேர் — மணீஷ், ஜோசப், விஷ்ணு — ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹6 லட்சம் பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இன்னும் 5 பேர் தலைமறைவாக உள்ளதால், அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.