நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் மூலம் வாக்காளர்களிடமிருந்து 31,006 பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல், மாவட்ட ஆட்சியர் தகவல்.
நாமக்கல் மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் மூலம் வாக்காளர்களிடமிருந்து 31,006 பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளது- மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் தகவல்.;
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் -2026 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று BLO App மூலம் பதிவேற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கும் பொருட்டு, 1629 வாக்குச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டு, கடந்த 04.11.2025 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதனைத் தொடர்ந்து, சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தொடர்புடைய வாக்காளர்கள் திருப்பி வழங்க வசதியாக கடந்த 25.11.2025 முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து நியாய விலைக்கடைகள் ஆகியவற்றில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் செயல்படும் முழுநேர மற்றும் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என 927 நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் மூலம் வாக்காளர்களிடமிருந்து பூரத்தி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கீட்டு படிவம் பெறும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 25.11.2025 அன்று 12,647 படிவங்களும், 26.11.2025 அன்று 18,359 படிவங்களும் என மொத்தம் 31,006 படிவங்கள் பெறப்பட்டுள்ளது.தொடர்ந்து, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு சோழசிராமணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் அதன் நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கீட்டு படிவம் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டு ஒப்படைக்கப்பட்டது தொடர்பான பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.