கிராமப்புறங்களில் இரண்டாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி

கிராமப்புறங்களில் இரண்டாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி;

Update: 2024-07-23 09:00 GMT
  • whatsapp icon

தமிழக முதல்வர் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக சென்று சேரும் வகையில் அதிகாரிகளை ஓரிடத்தில் வரவைத்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.இந்நிலையில் இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளுக்கும் இந்த திட்டம் சென்றடையும் வகையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோக்கவாடி, தோ.கவுண்டம்பாளையம்,வரகூராம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கரும கவுண்டம் பாளையம் சமுதாய கூடத்தில் இன்று அரசின் 14 துறைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு அவர்களது மனுக்களை ஆன்லைன் முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு உரிய விளக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் உடனடியாக தீர்க்கப்பட்ட 10 நபர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன. 

விழாவில் முகாமில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. உமா தலைமை தாங்கினார். நாமக்கல்மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலை வகித்தார். விழாவில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் கலந்து கொண்டு 10 நபர்களுக்கு உத்தரவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல், அட்மா தலைவர் வட்டூர் தங்கவேல் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, திருச்செங்கோடு, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News