ஆயுத பூஜைக்கு லாரியை கழுவும் பொழுது டிரைவர் நீரில் மூழ்கி பலி

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆய்த பூஜையை முன்னிட்டு வாகனத்தை ஏரியில் கழுவி விட்டு குளிக்க சென்ற லாரி ஓட்டுனர் நீரில் மூழ்கி உயிரிழப்பு;

Update: 2024-10-12 07:36 GMT

ஆயுத பூஜைக்கு லாரியை கழுவும் பொழுது டிரைவர் நீரில் மூழ்கி பலி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆய்த பூஜையை முன்னிட்டு வாகனத்தை ஏரியில் கழுவி விட்டு குளிக்க சென்ற லாரி ஓட்டுனர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

உடலை 8 மணி நேரமாக தேடி வரும் தீயணைப்பு துறையினர்.


காஞ்சிபுரம் மாவட்டம் மணியமங்கலம் அடுத்து சோமங்கலம் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் பிள்ளைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நபரிடம், லாரி டிரைவராக வேலை செய்து வந்தார், இந்த நிலையில் ஆயுதபூஜை முன்னிட்டு, அவர் ஓட்டி வரும் லாரியை நல்லூர் ஏரியில் இறக்கி, சுத்தம் செய்யும் பணியில் கார்த்திக் ஈடுபட்டுள்ளார், அதன் பிறகு ஏரியில் குளிக்க சென்ற போது, ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி மாயமாயினார். அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் கார்த்தியை தேடியும் கிடைக்காததால், இது குறித்து, சோமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் இருங்காட்டுக்கோட்டை உள்ள தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்த போலீசார், மற்றும் மீட்பு குழுவினர் 8 மணி நேரமாக, மாயமான கார்த்தியின் உடலை தேடி வருகின்றனர்.

Advertisement


 


 


Tags:    

Similar News