புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

Update: 2024-07-25 08:05 GMT
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அலுவலர்கள் மற்றும் போலீசார் தலைவாசல், இரும்பாலை, ஓமலூர், மேட்டூர் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள பெட்டிக்கடைகள், டீக்கடைகள் உள்பட பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்ற 4 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து அந்த 4 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். அதே போன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்ற 2 கடைகளுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் கூறும் போது,‘ மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரை புகையிலை பொருட்கள் விற்ற 649 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 47 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது ெதாடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Similar News