அதிமுக பகுதி செயலாளர் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு

தூத்துக்குடியில் மருமகளிடம் பாலியல் தொந்தரவு செய்த மாமனார் மற்றும் வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்தும் , வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும் கணவர் மாமியார் உள்ளிட்டோர் மீது பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் காவல்துறையினர் வழக்கு பதிவு.

Update: 2024-10-22 14:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடியில் மருமகளிடம் பாலியல் தொந்தரவு செய்த மாமனார் மற்றும் வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்தும் , வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும் கணவர் மாமியார் உள்ளிட்டோர் மீது பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை பரபரப்பு தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ், 60. இவர், மாநகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலரும் அதிமுக பகுதி செயலாளராகவும் உள்ளார். இவரது மகன் கவிராம், 29, என்பவருக்கும் சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை திவ்யதர்ஷினி, 25, என்பவருக்கும் கடந்த2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே அவர்களிக்கிடேயே பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், துாத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திவ்யதர்ஷினி நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் இதில். வீட்டில் தனியாக இருந்தபோது பொன்ராஜ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து கணவர் கவிராமிடம் கூறியபோது வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மாமனார் பொன்ராஜ், மாமியார் லீலாவதி, கணவர் கவிராம், கணவனின் சகோதரி கீதா ஆகியோர் மிரட்டினர் என தெரிவித்துள்ளார். மேலும், அந்த மனுவில், எனது தாய் வழி சொத்தில் 25 சென்ட் நிலத்தை எழுதி வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தினர். கருவுற்றிருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இஞ்சி மற்றும் கருவை கலைக்கக்கூடிய மாத்திரை கொடுத்து எனது கருவை கலைத்து விட்டனர். எதிர் கேள்வி கேட்டால் என்னை அடித்து மிரட்டுகின்றனர். திருமணத்தின் போது பெற்றோர் 80 சவரன் நகை, 10 லட்சம் ரூபாய் ரொக்கம், மற்றும் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர் அந்த நகைகள் எனது கணவர் குடும்பத்தினரிடம் உள்ளது. நகையை மீட்டுத் தந்து எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, பொன்ராஜ், அவரது மனைவி லீலாவதி, மகன் கவிராம், மகள் கீதா ஆகியோர் மீது 498 (ஏ), 354 (ஏ), 403, 506 (2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக திவ்யதர்ஷினி கூறுகையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனது மாமனார் மற்றும் தனக்கு வரதட்சணை கொடுமை செய்து 80 பவுன் நகையை பறித்துக் கொண்டு தராமல் ஏமாற்றி வருவதுடன் தனது கருவை கலைத்து கொலை செய்த மாமனார் பொன்ராஜ் மற்றும் கணவர் கவிராம் மாமியார் லீலாவதி கணவனின் சகோதரி கீதா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஆனால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை உடனடியாக அவர்களை கைது செய்து கருவை கலைத்ததற்கான பிரிவுகளின் பேரிலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார் இதேபோன்று பெண்கள் பாதிக்கப்பட்டால் பயப்படாமல் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க முன் வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Similar News