வாரச்சந்தையில் 40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
அரூர் அருகே புளுதியூர் வார சந்தையில் 40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபிநாதம் பட்டி கூட்ரோடு புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று டிசம்பர் 25 மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற இந்த சந்தைக்கு கிருஷ்ணகிரி. சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர். நேற்று நடந்த சந்தையில் மாடுகள் 5,000 முதல் 47,000 வரையும், ஆடுகள் 5,500 முதல் 11,000 வரை 40 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.