கல்லக்குடி உள்ளிட்ட 40 டோல்கேட்களில் சுங்க கட்டணம் உயர்வு !
திருச்சி கல்லக்குடி சுங்கச்சாவடியில் விலை உயர்வு குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன;

தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு வரும் ஏப்ரல் 1 -ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளை கடந்த காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் விதியாகும். அந்த வகையில் திருச்சி கல்லக்குடி சுங்கச்சாவடியில் விலை உயர்வு குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. :- அதன்படி,கார் மற்றும் வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.75 லிருந்து இன்று நள்ளிரவு முதல் 80 ரூபாயாக உயர்கிறது.இலகுரக வாகனங்கள் ரூ.125 லிருந்து ரூ. 130 ஆக உயர்கிறது.பேருந்து மற்றும் லாரிகளுக்கு 260 ரூபாயாக இருந்தது, தற்போது ரூ. 270 ஆக உயர்கிறது. வணிக வாகனங்களுக்கு 285 ரூபாயாக இருந்தது, புதிய கட்டணத்தின் படி ரூ.295 ஆக உயர்கிறது .புதிய கட்டண உயர்வின் படி ரூ. 5 முதல் 15 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது என தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.