திருவோணம் ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளுக்காக ரூ.40 லட்சம் மதிப்புள்ள 16 மின்கல வாகனங்கள் வழங்கல்

மின்கல வாகனங்கள்;

Update: 2025-08-09 13:24 GMT
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி தூய்மைப் பணிகளுக்காக மின்கல குப்பை அள்ளும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் தலைமை வகித்து, தலா ரூ..2.5 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 16 மின்கல வாகனங்களை ஊராட்சிகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி, திருவோணம் தெற்கு ஒன்றியச் செயலாளர் சோம. கண்ணப்பன், திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், சாமிநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள், கிராம பிரமுகர்கள், ஊராட்சி செயலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News