சங்கரன்கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருடிய 2 பேர் கைது
வீட்டில் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருடிய 2 பேர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி ஆசிரியை இவர் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்ற போது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர் இது குறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்த நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர் மேலும் அவரது வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளின் பதிவு படி குற்றவாளிகளை கடந்த எட்டு மாதமாக கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் தேடி வந்தனர் இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் மானாமதுரை சேர்ந்த தங்கராஜ் மற்றும் திருபுவனம் தாலுகா பச்சை பிள்ளையனேந்தல் சேர்ந்த அஜித்குமார் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் இவர்களை விசாரித்த போது இவர்கள் இருவரும் கலிங்கப்பட்டி ஆசிரியர் லட்சுமி வீட்டில் கொள்ளை அடித்தது தெரியவந்தது சிறையில் இருந்த இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் விசாரணை செய்தனர் விசாரணையில் கலிங்கப்பட்டியில் திருடியதை ஒப்புக்கொண்டனர் பின்னர் அவர்களிடம் இருந்த 40 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது இவர்கள் இருவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் கடந்த எட்டு மாதங்களாக குற்றவாளியை தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.