கோவை: ரூ.4.5 கோடி மோசடி செய்த நபர் மும்பை விமான நிலையத்தில் கைது !
கோவையில் ரூ.4.5 கோடி துணி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் மும்பை விமான நிலையத்தில் கைது.;
கோவை அன்னூர் அருகே பிள்ளையப்பம் பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் நடத்தும் மிலில், மும்பையை சேர்ந்த பரத்குமார் மாண்டிட் (42) என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ.6 கோடி மதிப்புள்ள துணிகளை வாங்கினார். ஆனால், ரூ.1.5 கோடி மட்டுமே செலுத்தி, மீதமுள்ள ரூ.4.5 கோடியை தவறாக எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து, பரத்குமாருக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. வெளிநாடு தப்ப முயன்ற அவரை, மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் பிடித்து காவல்துறைக்கு தகவல் வழங்கினர். தனிப்படையினர் மும்பைக்கு சென்று அவரை கைது செய்து, கோவையில் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.