திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 474 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்த 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து விவசாய பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.