மண்டல அளவிலான பளுதூக்குதல் மற்றும் குத்து சண்டை போட்டிகளில் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரி முதல் இடம்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் திருச்சி எஸ்.ஆர்.எம். டி.ஆர்.பி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-11-23 12:23 GMT
மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஆண்கள் அணியில் அனைத்து பிரிவிலும் 4 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் பெற்று ஞானமணி தொழில்நுட்ப கல்லூரி முதல் இடம் பிடித்து சாதனை படைத்தது. பெண்கள் பிரிவில் 3 வெள்ளி பதக்கம் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.ஆண்களுக்கான LIST தூக்கும் போட்டியில் மகிமைதாஸ். கௌதம். விஷ்வேஸ்வரன், லோகேஷ் ஆகிய மாணவர்கள் தங்கபதக்கமும் சந்தோஷ். சோலையரசு ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் விஷ்வநந்தன் வெண்கலபதக்கமும் பெற்றனர். பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் தமிழ்மதி, காவியா, ஜனனி வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான குத்துச் சண்டை போட்டியில் ஆண்கள் பிரிவில் மோனிஸ்வர் வெள்ளி பதக்கமும் பெண்கள் பிரிவில் அக்சயா வெள்ளிப் பதக்கமும் ஜனனி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள போட்டியில் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரி மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. 4x400 தொடர் ஓட்டத்தில் ஜெயப்பிரியா, வினோதா, அக்சயா, நதியா ஆகியோரும் 10000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் நிஷாந்தினியும் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஜெயப்பிரியாவும் ஈட்டி எறிதலில் வினோதாவும் 800 மற்றும் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நதியாவும் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள். வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் 20.11.2025 அன்று கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. ஞானமணி கல்வி நிறுவனத்தின் தலைவர் முனைவர் தி. அரங்கண்ணல் பதக்கங்களை வழங்கி மாணவர்களை பாராட்டி பேசுகையில் உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பின் விளைவாக இந்தச் சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன். ஞானமணி கல்வி நிறுவனத்தின் தாளாளர் பி. மாலாலீனா, துணை தாளாளர் செல்வி மதுவந்தினி அரங்கண்ணல், முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் பி. பிரேம்குமார். ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் செயல் இயக்குநர் முனைவர் எம்.மாதேஸ்வரன், முதல்வர் பி. சஞ்சய் காந்தி, துணை முதல்வர்கள் முனைவர் பாலகிருஷ்ணன், முனைவர் உமாமகேஸ்வரி, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள். பயிற்சியாளர் மற்றும் மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்கள்.