திருப்பத்தூரில் 5 புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் துவக்கி வைத்தார்
போக்குவரத்து துறை தனியார் துறை ஆகும் என்பது கட்டுக்கதை அப்படி என்றால் எதற்காக இப்பொழுது இந்த புதிய பேருந்துகள் போக்குவரத்து துறை அமைச்சர் பேச்சு!
திருப்பத்தூர் மாவட்டம் போக்குவரத்து துறை தனியார் துறை ஆகும் என்பது கட்டுக்கதை அப்படி என்றால் எதற்காக இப்பொழுது இந்த புதிய பேருந்துகள் போக்குவரத்து துறை அமைச்சர் பேச்சு! நேரமுறைப்படியும், குக்கிராமங்களுக்கும், பேருந்துகள் இயக்கபடுவதாலே தமிழகம் சமச்சீராக உள்ளது, திருப்பத்தூரில் நடைப்பெற்ற புதிய பேருந்து சேவை துவக்க விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு ஒரு பேருந்தும், சென்னையிற்கு இரண்டு பேருந்தும், மேல்பட்டியிற்கு ஒரு பேருந்தும், ஏலகிரி மலைக்கு ஒரு புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்து சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தார். மேலும் விழாவிற்கு முன்னதாக பேசிய, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.. பழைய பேருந்துகளை மாற்றி புதியதாக 7 ஆயிரத்து 200 பேருந்துகள் புதுப்பித்து இயக்கப்பட உள்ளது, எதிர்கட்சியினர் புதிய பேருந்துகள் வரவில்லையெனக்கூறுகின்றனர், அவர்களின் பார்வைக்காகவே அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற புதிய பேருந்து சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறையில், எந்த ஒரு புதிய பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும், பணிக்கு எடுக்கவில்லை, அதனாலேயே தற்போது, 2000 வழித்தடங்களில் ஓட்டுநர்கள் இல்லை, தற்போது ஓட்டுநர்கள் மற்றும் பணிக்கு தேர்வு நடைப்பெற்று புதியதாக ஓட்டுநர்கள் பணிக்கு சேர்ந்து வருகின்றனர்.. சில தொழிற்சங்கள், போக்குவரத்துறை தனியார் துறையாகும் என கூறுகிறார்கள், அது முற்றிலும் கட்டுக்கதை, தனியார் துறை என்றால் எதற்கு இப்பொழுது இந்த புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன, என கேள்வி எழுப்பினார், கடந்த அதிமுக ஆட்சியால் நிதிசுமை அதிகமாகியுள்ளது, அதை சரிசெய்த பின்னர் போக்குவரத்து ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும், என தெரிவித்தார.. மேலும் மற்ற மாநிலங்களை இல்லாத அளவில், நேர முறைப்படியும், குக்கிராம ங்களுக்கு, பேருந்து வசதி உள்ளதாலே தமிழகம் சமச்சீராக உள்ளது என தெரிவித்தார்.. மேலும் இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மற்றும் ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்..