மேலப்பாளையத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 5- பவுன் தங்க நகை கொள்ளையடித்த நபர் கைது.
மேலப்பாளையத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 5- பவுன் தங்க நகை கொள்ளையடித்த நபர் கைது.
மேலப்பாளையத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 5- பவுன் தங்க நகை கொள்ளையடித்த நபர் கைது. கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் கொடி தெருவை சேர்ந்தவர் இளையராஜா வயது 30. இவர் மேலப்பாளையம் பகுதியில் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்று மீண்டும் மாலை நான்கு மணி அளவில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, இவரது வீட்டின் முன் கதவு உடைத்து, வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் வைத்திருந்த தங்கச் செயின், பிரேஸ்லெட் மற்றும் தோடு உள்ளிட்ட ஐந்து பவுன் தங்க நகை அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மூர்த்தி வயது 38 என்பவர் களவாடி சென்று உள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த இளையராஜாவுக்கு இந்த சம்பவங்கள் அதிர்ச்சி அளித்தது உடனடியாக இது தொடர்பாக பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது மேற்கண்ட மூர்த்தி களவாடியது தெரியவந்தது. எனவே, மூர்த்தியை கைது செய்து, களவாடிய நகைகளை மீட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.