திருட்டு சம்பவத்தில் காவல் துறையினரிடம் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் நூதன திருட்டில் ஈடுபட்டு காவல் துறையினரிடம் சிக்கியுள்ள நிலையில் 18 வயது பெண் தலைமறைவாகியுள்ளார்

Update: 2024-08-27 16:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் நூதன திருட்டில் ஈடுபட்டு காவல் துறையினரிடம் சிக்கியுள்ள நிலையில் 18 வயது பெண் தலைமறைவாகியுள்ளார் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நொளம்பூர் சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணிபுரிந்து வரும் அசோக் குமார் என்பவர் காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். கடந்த 26 ஆம் தேதி பணியில் இருந்த பொழுது இரவு 8 மணிக்கு சந்தேகத்திற்கும் படியாக 2 பெண்கள் 1 ஆண் என சூப்பர் மார்க்கெட் உள்ளே வந்து அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்ததாகவும். அவர்களை தீவிரமாக கண்காணித்ததில் கடையில் உள்ள பொருட்களை திருடி அவர்களது உள்ளாடைக்குள் மறைத்து வைப்பது போல் தெரிந்தது. மேலும் ஊழியர்களின் செல்போன் வைக்கும் இருந்த ஐ போன் உட்பட இரண்டு செல்போன்களை திருடியதும்.சிசிடிவியில் தெரியவர கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் உதவியுடன் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ய பொழுது கடையை விட்டு வேகமாக ஒரு பெண் வெளியேறிய ஓட முயற்சி செய்ததாகவும். கடை ஊழியர்கள் அவர்களை விரட்டிப் பிடித்த பொழுது அந்த பெண்கள் தங்களது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். அதில் எங்கள் கடையின் பணியாற்றும் ஊழியர்கள் பயன்படுத்தும் 2 செல்போன்களை திருடியுள்ளனர். ஹார்லிக்ஸ்,பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு, கருப்பு திராட்சை, சக்தி டிரை ஃப்ரூட்ஸ், மற்றும் வரமிளகாய், தனியா, போன்ற மளிகை பொருட்களை மீட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னை டிநகரில் உள்ள குரோமா ஷோரூமில் 5 செல்போன்கள் திருடியதும் தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும். அம்பத்தூர் சிவானந்த நகரை சேர்ந்த குட்டியம்மாள் வ/43,செல்வி வ/38 சந்தோஷ,வ/22,சஞ்சய் வ/20 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள பிரியா வ/18 போலீசார் தேடி வருகின்றனர் மேலும் சிக்கியவர்களிடமிருந்து அனைத்து பொருட்களும் முறையாக பறிமுதல் செய்யப்பட்டு. அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News