மங்கலம்பேட்டை பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்த 5 பேர் மீது வழக்கு

மூன்று பேர் கைது

Update: 2024-09-26 17:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கச்சிராயநத்தம் டாஸ்மாக் கடை அருகே உள்ள அரசு முந்திரி தோப்பு பகுதியில், அதிக போதை தரக்கூடிய விஷ நெடியுடன்கூடிய பொருளை மதுவில் கலந்து விற்பனை செய்ததாக, விருத்தாசலம் 2வது தாஸ்கண்ட் நகரை சேர்ந்த சாமியப்பன் மகன் குமார் (40), ஆலடி கிராமம், வெங்கடேசன் மகன் விக்னேஷ் (35) ஆகியோர் மீது மங்கலம்பேட்டை உதவி ஆய்வாளர் பொட்டா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குமார் என்பவரை கைது செய்தனர். அதேபோல், மங்கலம்பேட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டு அரசு மதுபான கடைக்கு அருகில் உள்ள முள் காட்டில், அரசு அனுமதி இல்லாமல் மதுபானம் விற்பனை செய்ததாக மங்கலம்பேட்டை, புது நெசவாளர் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜெயக்குமார் (55), உள்ளிட்ட 2 பேர் மீது, மங்கலம்பேட்டை உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஜெயக்குமாரை கைது செய்தனர். மேலும், கோ.பவழங்குடி கிராமம், சித்துகுளம் அருகில், அதே கிராமத்தின் தெற்கு தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பரசுராமன் (29) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் அரசு அனுமதியின்றி பாண்டிச்சேரி அரசு மதுபான பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக, பரசுராமன் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Similar News