நகராட்சிக்கு 5 குப்பை மறுசுழற்சி வாகனம்

கொல்லங்கோடு;

Update: 2025-07-13 13:04 GMT
குமரி மாவட்டம்  கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள மட்கும் குப்பை மற்றும் மட்கா குப்பை ஆகியவற்றை அள்ளி மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல 5 வாகனங்கள் நகராட்சி அலுவலகத்தில் வந்தது. இந்த வாகனத்தை பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கும் வகையில் துவக்க நிகழ்ச்சி நேற்று  நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன், பொதுப்பணி மேற்பார்வையாளர் பிரம்ம சக்தி, துப்புர ஆய்வாளர் பிரபாகரன். களப்பணி உறவினர் ராஜேஷ். நகராட்சித் தலைவர் ராணி. கவுன்சிலர் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News