ஓசூரில் 5 வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிப்பு.

ஓசூரில் 5 வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிப்பு.;

Update: 2025-09-06 10:30 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வழியாக ஆம்னி பேருந்துகள் முறையாக வரி செலுத்தாமல் இருப்பதாக வந்த புகாரின் பேரில் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் ஓசூர் ராயக்கோட்டையில் நேற்று அதிகாலை அசோக் பில்லர் அருகே திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஆம்னி பேருந்துகள் சாலை வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தாமல் இயக்கப்பட்ட 5 வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு 1 லட்சத்து 77 ஆயிரத்து 4 ரூபாய் வசூல் செய்யப்பட்டன.

Similar News