கரூர் மாவட்டத்தில் அரசின் உறுதிமொழிகள் 50 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது- வேல்முருகன்.

கரூர் மாவட்டத்தில் அரசின் உறுதிமொழிகள் 50 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது- வேல்முருகன்.

Update: 2024-10-23 13:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டத்தில் அரசின் உறுதிமொழிகள் 50 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது- வேல்முருகன். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வு குழுவின் தலைவர் வேல்முருகன், அரசு வளர்ச்சிப் பணிகள் குறித்து உறுதிமொழி அளித்த பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டோம். இதில் பேரவைக்கு அளிக்கப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ள பணிகள் 66. இதில் பணிகள் நிறைவேற்றப்பட்டு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவை 17. இதில் 15 ல் இருந்து 20- உறுதி மொழிகளில் 75% பணிகள் நடைபெற்று வருகிறது. உதாரணமாக அறநிலை துறை சார்பில் நடைபெறும் குடமுழுக்கு பணிகள் 60 முதல் 75% பணிகள் முடிந்துள்ளது. முழுமையாக பணிகள் முடிக்க மூன்று மாத காலம் அவகாசம் கேட்டுள்ளனர். அந்தப் பணிகளும் முடிவுற்றால் கரூர் மாவட்டத்தில் அரசு உறுதிமொழி அளித்த பணிகளில் 50 சதவீதத்திற்கும் மேலாக உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டதாக இந்த குழு கருதும் என்றார்.

Similar News